புதியவை

கொட்டாவி எமது சுறுசுறுப்பினை அதிகரிக்கும்

கொட்டாவி எமது சுறுசுறுப்பினை அதிகரிக்கும்

நம்மோடு பேசிக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து உரையாடும் போதோ, நமக்கு சுவாரஸ்யமில்லாத வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையிலோ, நம்மையும் அறியாமல் வாயை மெதுவாக அதே சமயம் வெகு பெரிதாக ‘ஹோவ்’ என்ற ஓசையுடன் கொட்டாவி விடுகிறோம்.
இந்த செயலுக்கான பின்னணி என்ன? என வெகு ஆண்டுகளாக ஆய்வு செய்துவந்த உடல்கூற்றியல் வல்லுனர்கள், தற்போது அதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளனர்.
உறக்கத்திற்கான தேவை மற்றும் அசதி அதிகமாகும் வேளையில் இதைப்போல் அடிக்கடி வரும் கொட்டாவியானது, சூடாகிப்போன நமது மூளையை குளிர்விக்கும் ஒரு காரணியாக திகழ்வதாக இந்த ஆய்வை மேற்கொண்ட டொக்டர் நிக் நைட் என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், நமது நுரையீரலில் தேங்கிப்போன அளவுக்கதிகமான கரியமில வாயு (காபன் டைஒக்சைட்) கொட்டாவிகளின் மூலம் வெளியேற்றப்பட்டு, புதிய பிராணவாயுவை (ஒட்சிசன்) நுரையீரல் உள்வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர், ஒவ்வொரு கொட்டாவிக்குப் பின்னரும் நமது விழிப்புணர்வு சார்ந்த சுறுசுறுப்பு அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.