புதியவை

தியத்தலாவ நீரேந்துப் பகுதியில் இரசாயனப் பொருட்கள் கலக்கும் அபாயம்


பதுளை, தியத்தலாவ கஹகொல்ல நீரேந்துப் பகுதிக்கு அருகில் இராசாயன பதார்த்தங்கள் அடங்கிய லொறியொன்று குடைசாய்ந்துள்ளதை அடுத்து, நீரில் இரசாயனப் பதார்த்தம் கலக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த லொறி இன்று காலை குடைசாய்ந்துள்ளது.
இதன் காரணமாக கஹகொல்ல, கொலதென்ன, கரகஹவெலயில் இருந்து மாதொடில்ல ஓயா வரையான நீரேந்து பகுதியில் நீரைப் பயன்படுத்திகின்றவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டுமென மாவட்ட இடர்முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல் உதயகுமார தெரிவித்துள்ளார்.
இந்த நீரேந்து பகுதியிலிருந்து தியதலாவை மற்றும் ஹப்புத்தலை பிரதேசங்களுக்கான நீர்விநியோகம் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய குறிப்பிடுகின்றார்.
ஆயினும், இந்த பிரதேசங்களுக்கு அலுத்வெல நீரேந்து பகுதியிலிருந்தே அதிகளவான நீர்விநியோகம் முன்னெடுக்கப்படுவதால், நீர் விநியோகம் தடைப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.