புதியவை

தேர்தல் நிறைவு பெற்றதன் பின் அமைதியான சூழல் நிலவுவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு

தேர்தல் நிறைவு பெற்றதன் பின் அமைதியான சூழல் நிலவுவதாக கண்காணிப்பாளர்கள் தெரிவிப்பு

தேர்தல் நிறைவு பெற்றதன் பின்னரான காலப் பகுதி மிகவும் அமைதியாக உள்ளதென தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறு அளவிலான சம்பவம் ஒன்றை தவிர வேறு எந்தவொரு வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமைதியை தொடர்ந்தும் பேணுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பெவ்ரல் அமைப்பின் நிறைவெற்றுப் பணிப்பாளர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் எனவும் பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் ஒரு சம்பவம் பதிவானதாக கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.
வழமையாக வாக்கெண்ணும் நிலையங்களை அண்மித்த பகுதிகளில் காணப்படுகின்ற பதற்றம் இம்முறை தேர்தலின்போது இருக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் சட்டத்தை மதித்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்து அரசியல் கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும் செயற்படுவார்கள் என நம்புவதாகவும் கெஃபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.