புதியவை

எது காதல்-நுஸ்ரி புத்தளம் இலங்கைபெரிய துண்டு கேக்கை அம்மா
அண்ணனுக்குக் கொடுக்க
அதை அவன் தன் தம்பிக்கு
நீட்டுவது காதல்
மழை காலத்து சேற்றில்
தங்கை வழுக்கி விடாமல்
தூக்கிக்கொண்டே வழுக்கி வழுக்கி
நடக்கும் அண்ணன்
தன் தங்கை மீது காதல்
கோபத்தில் அடித்துவிட்ட
மகனின் தலையை
தடாவித் தடாவியே
தூக்கம் தொலைக்கும்
அம்மா தன் பிள்ளையில்
காதல்
பிள்ளை கேட்டதை
வாங்கிக் கொடுக்க முடியாமல்
பிள்ளையை நெஞ்சோடு
அணைத்து, உள்ளுக்குள்
அழும் அப்பாவின் காதல்
தான் மாட்டிக்கொண்டாலும்
நண்பனை மாட்டிவிடாமல்
தண்டனை வாங்கும்
நண்பன் நெஞ்சில் காதல்
விரிக்கப்பட்ட குடைக்குள்
கசக்கப்படும் இதழ்கள்
இருட்டறைக்குள்
அனுமதியின்றிக்
கசங்கும் கற்புகள்
இதில் தனிமையையும்
இருளையும் காதலிக்கிறார்கள்
மற்றதெல்லாம் காதலின்
காமத்தால் ஜோடிக்கிறார்கள்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.