புதியவை

ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்

ஆசனங்களை இழந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்
இம்முறை தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்களின் ஆசனங்களை இழந்துள்ளனர்.
காலி மாவட்டத்தில் போட்டியிட்ட பியசேன கமகே மற்றும் குணரத்ன வீரக்கோன் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் தமது பாராளுமன்ற ஆசனங்களை இழந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் முன்னிலை சோஷலிசக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தியஅஜித்குமாரவும் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபல அரசியல் பிரமுகராக விளங்கிய எஸ். பி. திசாநாயக்கவும் இம்முறை பாராளுமன்றத்திற்குத் தெரிவாவதற்கான வாக்குகளைப் பெறத் தவறியுள்ளார்.
ஏ.ஆர்.எம்.ஏ. அப்துல் காதர் மற்றும் எரிக் வீரவர்தன ஆகியோரும் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் சுரேஷ் பிரேமசந்திரன், சில்வெஸ்டர் அலென்ரின் மற்றும் முருகேசு சந்திரகுமார் ஆகியோருக்கும் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு இல்லாமற்போயுள்ளது.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வி.கே. இந்திக்க மற்றும் நிருபமா ராஜபக்ஸஆகியோரும் தோல்வியடைந்துள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டவிஜய தஹநாயக்க, ஹேமால் குணசேகர மற்றும்லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோருக்கு பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். தௌபீக்கும் தமது பாராளுமன்ற ஆசனத்தை இழந்துள்ளார்.
மாத்தளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தியநந்திமித்ர ஏக்கநாயக்க மற்றும் ரோஹண திசாநாயக்க ஆகிய முன்னாள் அமைச்சர்களும் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகவில்லை.
மொனராகலை மாவட்டத்தில் பிரபல அரசியல் பிரகமுகர்களாக விளங்கிய ஜகத் புஷ்பகுமார மற்றும் விஜித் விஜயமுனி சொய்ஸா ஆகிய அமைச்சர்களும் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறவில்லை.
பதுளை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட உதித லொக்குபண்டார, ரோஹன புஷ்பகுமார ஆகிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் வரிசையில் இணைந்துகொண்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.