புதியவை

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த தம்பதியினர் கைது

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பண மோசடி செய்த தம்பதியினர் கைது

வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த கணவனும் மனைவியும் மாத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துபாயில் பிரமுகர் பாதுகாப்புப் பிரிவில் தொழில் வாய்புக்களை பெற்றுத் தருவதாக கூறி இவர்கள் பணம் வசூலித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களுக்கு எதிராக வில்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இறத்தோட்டையை சேர்ந்த குறித்த தம்பதியினர் 30 இலட்சத்து 60,000 ரூபாவை மோசடி செய்துள்ளமை ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களிடமிருந்து 28 கடவுச் சீட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் நாவுல நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.