புதியவை

பிரேமலால் ஜயசேகரவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

பிரேமலால் ஜயசேகரவிற்கு விளக்கமறியல் நீடிப்பு

பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ள பிரேமலால் ஜயசேகரவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பெல்மதுளை நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினரை பெல்மதுளை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்திய சந்தர்ப்பத்திலேயே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
செப்டம்பர் மாதம் 08ஆம் திகதி வரை அவரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் பொதுக்கூட்டமொன்றிற்கான அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்த ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் சிலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரேமலால் ஜயசேகர கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.