புதியவை

பாங்கொக் தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம்

பாங்கொக் தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம்

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் உள்ள வழிபாட்டுத்தலமொன்றுக்கு அருகே நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள ஜனாதிபதி காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து மன்னர் பும்போல் அதுல்யாடெப்பிற்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்து மக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பாரியார் ஸ்வரா முகர்ஜியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறங்கல் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள குறித்த இறங்கல் செய்தியில் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பில் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.