புதியவை

அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கை விஜயம்

அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இலங்கை விஜயம்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (25) அதிகாலை இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொம் மலினொவ்ஸ்கியும் அவருடன் வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்கள் இருவரும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பொருளாதாரம், நல்லாட்சி, ஜனநாயக மேம்பாடு, நல்லிணக்கம், நீதி ஆகிய விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்புக்களின்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நாளைய தினம் நிஷா பிஸ்வால் இந்திய தலைநகர் புதுடில்லிக்கு பயணமாகவுள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் ரொம் மலினொவ்ஸ்கி எதிர்வரும் 27 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று (25) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.