கடந்த 27.08.2015 அன்று சாந்தியடைந்த விழுது மேம்பாட்டு மையத்தின் ஸ்தாபகரான சாந்தி சச்சிதானந்தம் அவர்களுக்காக எழுத கண்ணீர் அஞ்சலி.. கவிதை..
சாந்தி நீர் சாந்தமாகிவிட்டீர்...
பெண்களின் கண்ணீரைத் துடைத்து வந்தீர்
விழுதுகள் ஊடாக உண்பயணம் அகவிழியாய் மலர...
அகவிழி கொண்ட உமது வாழ்க்கையும் சாந்தமாகிவிட்டதே
அம்மா எனும் ஸ்தானத்தில் செய்த சேவைகள் பல
இப்போது நினைத்தாலும் நெஞ்சம் குழைகிறதே...!
பொறியியல் துறையை துறந்து
அபயமளிக்கும் பெண்களின் வாழ்வில் மலர்ச்சி கொடுத்தாய்
உம்வாழ்வு இத்தனை வேகமாய் சென்று விட்டதே!
அரசியல் விமர்சனம் உம் கைவந்த கலை
இனமதபேதமின்றி அனைவரையும் ஆதரித்தாய்
பேச்சாற்றலிலும் உனக்கு நிகர் உண்டோ!...
அடி என்னடி உலகம் இதில் எத்தனை கலக்கம்...!
என்று யாருக்கெல்லாம் பரிந்து கொண்டாய்
எண்ணற்ற எழுத்துக்களால் உம்மை தூய்மையாக்கினீர்...!
கொண்டது கோலம் என்கிற பெண்ணாக நீர் வாழவில்லை
மக்களின் அடிப்படை பிரச்சினையில் நீர் ஒட்டிக் கொண்டாய்...!
மாகாண, மத்திய அரசில் பெண்களின் இடஒதுக்கீடு
உயர்வு பெற முன்னின்று உழைத்தாய்!
நூறுகோடி பெண்களை விழித்தெழ உலகம் முழுவதும் பறந்தாய்
பெண்ணிலையில் நீர் கொண்டிருந்த இணைப்பு
ஆணாதிக்க மேலாண்மையை கேள்விக்குள்ளாக்கியது
அடி என்ன உலகம் என்று யாரைப்பார்த்து கேட்டீர்
இன்று அந்த எழுத்துக்கு சாந்தி இல்லையே...!
நாம் அகவிழியில் பயணித்தபோது
உங்களது அடக்கமான வார்த்தை!
உங்களது கம்பீர தோற்றம்!
தலைமைக்குரிய மாண்பு!
எம்மை ஆர்ப்பரித்திருந்தன. - ஆனால்
இன்று அகவிழி, விழுதாய் கண்ணீர் சிந்துகிறது...!
உங்களை ஆட்கொண்டோரின் மனமும் சிந்துகிறது...!
உம்மைப்போன்ற ஒருவரை நாம் எப்போது காண்பது
உம் ஆத்மா சாந்தம் அடைய
உம்மக்கள் குடும்பத்தவர்கள் அனைவருக்கும்
எம் கண்ணீர் அஞ்சலி...!
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.