புதியவை

சப்ரகமுவ பல்கலை மாணவியர் விடுதிக்குள் நுழைய முற்பட்ட இளைஞர் கைது

சப்ரகமுவ பல்கலை மாணவியர் விடுதிக்குள் நுழைய முற்பட்ட இளைஞர் கைது



சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதிக்குள் நுழைய முற்பட்டதாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

நேற்று மாலை சந்தேகநபர் குறித்த விடுதிக்குள் நுழைய முற்பட்டதாக, இரண்டு மாணவிகள் பலாங்கொடை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார். 

இவர் சமனலவெவ மின் உற்பத்தி நிலையத்தில் பணிபுரியும் சாரதியாக உள்ள 29 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. 

இதேவேளை குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

பலாங்கொடை - பம்மன்ன பிரதேசத்தில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இது குறித்த மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.