புதியவை

கம்பஹா மாவட்ட விருப்பு வாக்குகள்: ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையில்

கம்பஹா மாவட்ட விருப்பு வாக்குகள்: ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையில்

பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய கம்பஹா மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள உறுப்பினர்களின் விருப்பு வாக்கு விபரம் ​வெளியிடப்பட்டுள்ளது .
இதன் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்ட ரஞ்சன் ராமநாயக்க அதிகபடியாக 2,10,463 விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார் .
இரண்டாவது இடத்தில் உள்ள அர்ஜுன ரணதுங்க 1,65,800 வாக்குகளை பெற்றதுடன், ருவன் விஜேவர்த்தன 1,50,932 விருப்பு வாக்குகளை பெற்று கம்பஹா மவாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 3 ஆவதாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.
ஹர்ஷன ராஜகருணா 1,22,405 விருப்பு வாக்குகளை பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளதுடன் அஜித் மானப்பெரும 1,13,800 வருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டார் .
இதே வேளை ஜோன் அமரதுங்க ,காவிந்த ஜயவர்த்தன, சத்துர சேனாரத்ன மற்றும் எட்வின் குணசேகர ஆகியோரும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் கம்பஹா மாவட்டத்தில் வெற்றியீட்டியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் பிரசன்ன ரணதுங்க 3,80,448 விருப்பு வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.
பிரசன்ன ரணவீர 1,12,300 விருப்பு வாக்குகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் நிமல் லன்சா 94,370 விருப்பு வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதே வேளை சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே,துலிப் வீரசேகர மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
மக்கள் விடுதலை முன்னணி சார்பில் விஜித ஹேரத் மாத்திரமே தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
அவர் 55,290 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.