புதியவை

நல்ல நண்பர்கள் - இலந்தை


பண்பட்ட  நண்பர்களேபாடல் என்னும்
            பயிர்வளர்க்கும் அன்பர்களேஉள்ளம் என்னும்
கண்பட்ட தெல்லாமும் கவிதை செய்யும்
            கவிஞர்களேஎங்கெங்கோ இருந்தும்சொந்த
மண்தொட்டுமனந்தொட்டுகவிதை பாடும்
            மாண்புடைய நெஞ்சங்காள்குழுமம் நல்ல
நண்பர்கள் கூட்டமைப்பால் தானே இங்கே
            நல்லபடி நடக்கிறது,  மறுப்போர் உண்டா?


முதலில்நான் வந்துவிட்டேன்வெற்றிப் பாதம்
            முதற்படியில் வைத்துவிட்டேன்சூசகத்தால்
முதலில்வா எனவழைத்த நடுவ ருக்கு
            முதல்நன்றிசேர்த்துவைத்த அறிவெப் போதும்
உதவிக்கு வாராதுமனத்தி னோடே
            ஊடாடிக் கொண்டிருக்கும், , ஊறு செய்யும்
கதவுக்குப் பக்கத்தில் நின்று கர்வக்
            கனமேற உயர்வுக்குக் கதவடைக்கும்


காட்டுக்குள் ளேமலர்ந்து காண்பா ரின்றிக்
            கருகிவிழும் பூவாலே பயனொன்றில்லை
வீட்டுக்குள் அதைக் கொணர்ந்துவிளங்க வைக்கும்
            வித்தகனைப் போன்றவன்தான் நல்ல நண்பன்
பூட்டுக்குச் சாவியவன்வெற்றிப்பாதை
            போடுகிற தியாகியவன்திறமை காட்டி
நாட்டுக்குள் உலவவிடும் உந்து சக்தி
            நல்லவழி காட்டுகிற கைவி ளக்கு


வானத்தின் நல்லுயரம்மண்பரப்பு
            மறிகடலில்  நல்லாழம்இவையெல்லாமும்
ஈனத்திற் காளாகும் நண்பரின்முன்
            ஏற்காத வழிசென்றால் இடித்துரைத்தும்
தானெத்தைச் செய்தாலும் நண்பனுக்குச்
            சங்கடத்தைத் தாராமல் பார்த்துக் கொண்டும்
மானத்தைக் காக்கின்ற நண்பன் தானே
            மண்ணுலக உயர்வுக்கு வழிசெய்கின்றான்!

கடல்தாண்டும் அறிவிருந்தும்அனுபவத்தைக்
            கண்டிருந்தும்இலங்கைக்குச் செல்லுதற்குத்
திடந்தேய்ந்த அனுமனுக்குத் திறமை தன்னை
            செப்பிவிட்ட நல்லநண்பன் ஜாம்பவான்தான்
தடம்மாறிப் போகாமல் காத்தான்அந்தச்
            சானகியைக் காணுதற்கு வழிவகுத்தான்
உடன்வந்து காக்கின்ற நண்பன் போலே
            உதவுபவர் உலகத்தில் யாரே உண்டு?


ஒன்பதுபேர் அன்றொருநாள் படகில் சென்றார்
            உழைப்பாளிநம்பிக்கை உள்ளான்,என்றும்
தன்முயற்சி தளராதான்அறிஞன்முன்பு
            தான்பெற்ற அனுபவங்கள் நிறையக் கொண்டோன்
அன்புடனே அனைவரையும் தரித்தே
            அரவணைக்கும் நல்நண்பன்என்றே அந்நாள்
இன்ப உலாச் சென்றவர்கள்படகோட்டிக்கே
            இதயவலி வந்துவிடக் கலங்கிப் போனார்

"துடுப்பெடுங்கள்இருபக்கம் தள்ளிக் கொண்டே
            துழவுங்கள் " என அறிஞன் சொன்னான்முன்பு
"துடுப்பெடுத்த அனுபவந்தான்ஆனால் சற்றே
            தோளில்வலிஎனச்சொன்னான் ஒருவன்நல்ல
"திடம்பெறுவான் படகோட்டிநம்பிக் கைதான்
            ஜெயம்கொடுக்கும்ஃதொருவன் சொன்ன கூற்று
"மடமடவென் றேவலிப்பேன் ஆனால் தள்ளும்
            வகையறியேன்என உழைக்கும் மனிதன் சொன்னான் .


"நீந்துகிற கலையறிவேன்ஆனால் முன்பு
            நீந்தியதே இலை"யென்றான் அறிஞன், "நானோ
நீ£ந்தியுளேன்குளிர்நீரில் சென்றால் சாவேன்
            நிச்சயமெ"ன் றனுபவஸ்தன் எடுத்துச் சொன்னான்
சாந்தமுடன் பார்த்திருந்த நண்பன் சற்றும்
            தளராமல் உரைசெய்தான்ஒருவர் மட்டும்
நீந்துவதால் பயனில்லை,  நாமெல் லோரும்
            நிம்மதியாய்க் கரைசேர வழிசொல்லுங்கள்"

துடுப்பெடுத்தே உழைப்பவனின் கையில் தந்து
            "சொல்லுங்கள்எனவறிஞன் இடத்தில் சொல்லி
அடுத்திருக்கும் பட்டறிவுக் காரன் தன்னை
            அவனுக்குப் பக்கத்தில் அமர வைத்து
படுத்திருக்கும் படகோட்டி மார்பு தன்னைப்
            பக்குவமாய்த் தேய்த்துவிட்டுநெஞ்சம் ஒன்றித்
தடுத்திருக்கும் நிலைமாற்றித் தலைமை ஏற்றுத்
            தானுமொரு கைகொடுத்தான் நல்ல நண்பன்.


கரையேறி விட்டார்கள்நண்ப னுக்கு
            கைதூக்கி விட்டதற்கு நன்றி சொன்னார்
தரமான படமான தூக்குத் தூக்கி
            சாற்றுவதோஉயிர்காப்பான் தோழன்என்றே
சரிவான நிலைவந்த போதும் துன்பம்
            தாங்குவதில் துணைநிற்பான்  நண்பன்வாழ்வில்
சரியான நெறிமாறித் தவறு செய்தால்
            தடுத்தாண்டு காப்பதுவும் நண்பன் தானே!

சுற்றமெலாம் விட்டுவிட்டு வேற்று நாட்டில்
            தொழில்செய்ய வந்துவிட்டால்அங்கே நம்பால்
பற்றுமிகு நண்பர்கள்தாம் பாது காப்பர்
            பாராட்டிச் சுற்றத்தின் மேலாய் நிற்பர்
கற்றதுவும் உற்றதுவும் துணைசெய் யாமல்
            கைவிட்டு நிற்கையிலே நண்பன் காப்பான்
நற்றவத்தால் நல்நண்பன் கிடைப்பான்ஆமாம்
            நட்பதனை விஞ்சுவதற் கேது மில்லை!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.