புதியவை

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பின் தலைவருக்கே: இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தல்

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பின் தலைவருக்கே: இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தல்

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி, இலங்கை தமிழரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவருக்கே வழங்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி இன்று வௌியிட்டுள்ள அறிக்ைகயில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி பொதுத் தேர்தலில் 16 ஆசனங்களை கைப்பற்றி, பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களை பெற்ற தனிக்கட்சியாக திகழ்வதாகவும் அந்த அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய அரசாங்கமொன்றை ஏற்படுத்துவதற்கான இணக்கப்பாடு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியன அமைச்சு பதவிகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் அந்த அறிக்ைகயில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பாராளுமன்றத்தில் மூன்றாவதாக கூடிய ஆசனங்களை பெற்ற தனிக்கட்சியாக இலங்கை தமிழரசுக் கட்சி திகழ்வதாக அந்த அறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகவே, இரு பிரதான கட்சிகளும் தேசிய அரசாங்கமொன்றுக்காக இணக்கப்பாடு எட்டியுள்ள நிலையில், அடுத்தபடியாக 16 ஆசனங்களை பெற்று முன்னிலையிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சிக்கே பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்க வேண்டும்.
இதுவே பாராளுமன்ற சம்பிரதாயமும், வழிமுறையும் என அந்த அறிக்ைகயின் ஊடாக இலங்கை தமிழரசு கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
அதனால் அனைத்து தரப்பினருக்கும் பாராளுமன்றத்தில் ஒரே சமமான பொறுப்புக்கள் காணப்படுவதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
இதன்பிரகாரம், அமைச்சரவையினால் எட்டப்படும் அனைத்து தீர்மானங்களுக்கும் அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என அறிக்ைகயின் ஊடாக இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளது.
இதேவேளை, தமிழர்களுக்கு சமமான உரிமைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும், தற்போது அந்த உறுதி மொழியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை தெரிவதாக இலங்கை தமிழரசுக் கட்சி குறிப்பிட்டுள்ளது.
ஜனநாயக ரீதியில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு சம அந்தஸ்த்து கிடைக்காமையே இந்த பின்னடைவுக்கான காரணம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் சமமான உரிமைகளை வழங்குவதற்கான சந்தர்ப்பம் தற்போது கிட்டியுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.