புதியவை

ஐ.ம.சு.கூ தேசியப் பட்டியலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

ஐ.ம.சு.கூ தேசியப் பட்டியலுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
மக்கள் ஐக்கிய முன்னணி சோமவீர சந்திரசிறியினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தற்போது பெயரிடப்பட்டுள்ள தேசியப் பட்டியல் தடை செய்யப்பட வேண்டும் எனவும், இந்த மனு மீதான விசாரணைகள் நிறைவு பெறும் வரை தேசியப் பட்டியல் ஊடாக பெயரிடப்பட்டுள்ளவர்கள் பாராளுமன்றத்திற்கு பிரவேசிப்பதைத் தடை செய்யுமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது பெயரிடப்பட்டுள்ள உறுப்பினர்களின் நியமனங்கள் அரசியலமைப்புக்கும், தேர்தல் சட்டத்திற்கும் முரணானது என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு முன்னர் தேசியப் பட்டியலில் தமது பெயர் உள்ளடக்கப்பட்ட போதிலும், தேர்தலுக்கு பின்னர் தமது பெயர் நீக்கப்பட்டுள்ளமையானது அடிப்படை உரிமை மீறல் என சோமவீர சந்திரசிறி சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, இந்த நியமனங்களுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையாளர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் உள்ளடங்கலாக 45 பேர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.