புதியவை

ஏழாவது பிணை மனு நிராகரிப்பு: வடமத்திய மாகாண சபைத் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு

ஏழாவது பிணை மனு நிராகரிப்பு: வடமத்திய மாகாண சபைத் தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு

வடமத்திய மாகாண சபைத் தலைவரின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் பிரதம நீதவான் ஷானக கலங்சூரிய முன்னிலையில் வடமத்திய மாகாண சபைத் தலைவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மாகாண சபையின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியினால் வறுமைக் கோட்டிலுள்ளவர்களுக்கான கூரைத் தகடு விநியோகத்தின்போது சுமார் 9 இலட்சம் ரூபாவை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக மாகாண சபைத் தலைவர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
வடமத்திய மாகாண சபையின் தலைவரை பிணையில் விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணிகள் ஏழாவது முறையாகவும் இன்று தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
சந்தேகநபருக்குப் பிணை வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக, சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கையொன்றை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.