
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் டி வாஸ் குணவர்தனவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 23 வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட சஜின் டி வாஸ் குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் இரண்டு வாகனங்களின் நிறங்களை மாற்றியதாகவும் எஞ்சின் இலக்கத்தை திரிபுபடுத்தியதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.