புதியவை

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை பாரியளவில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை பாரியளவில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த 6 1/2 வருடங்களுக்குள் சர்வதேச சந்தையில் இவ்வாறு மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி கண்டுள்ளதாக ரொயிட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
ஒரு பீர்ப்பாய் மசகு எண்ணெய்யின் விலை இன்று 40 தொடக்கம் 45 அமெரிக்க டொலர்கள் வரை காணப்படுகின்றது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெய்யின் விலை 60 தொடக்கம் 65 அமெரிக்க டொலர்களாக பதிவாயிருந்தது.
பிரேன்ட் சந்தையில் ஒரு பீர்ப்பாய் மசகு எண்ணெய்யின்  இன்றைய விலை 43.51 அமெரிக்க டொலராக பதிவாகியது.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரேன்ட் சந்தையில் இவ்வாறு விலை பதிவாகியிருந்தது.
இதே வேளை அமெரிக்க சந்தையில் மசகு எண்ணை ஒரு பீர்ப்பாயின் இன்றைய விலை 38.62 அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி கண்டதுடன், 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த வீழ்ச்சியானது பாரிய வீழ்ச்சி என ரொயிட்டர் செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இந்த மாதத்திற்குள் மாத்திரம் 13 வீதத்தால் வீழச்சியடைந்துள்ளதாக ரொயிட்டர் செய்தி சேவை தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் உலகில் எண்ணெய்க்கான கேள்வி வீழச்சியடையலாம் என முதலீட்டாளர்கள் உத்தேசித்துள்ளமையே இந்த வீழ்ச்சியின் பிரதான காரணம் என அத்துறைசார் நிபுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதே போன்று உலகின் இரண்டாவது பொருளாதார நிலையான சீனாவின் பொருளாதார அபிவிருத்தி வேகம் வீழ்ச்சியடைகின்றமையே  இதற்கான பிரதான காரணமென சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை , புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் அமெரிக்காவின் எண்ணெய் உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்ந்தும் அதிகரிக்கையில் , ஒபேக் அமைப்பின் நாடுகளும் தமது எண்ணெய் உற்பத்திகளை தொடர்ந்தும் உயர் மட்டத்தில் முன்னெடுக்கின்றமை இந்த விலை வீழ்ச்சிக்கு மற்றுமொரு காரணமென நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்க எண்ணெய் உற்பத்தி செலவீனம் உயர் புள்ளியில் காணப்படுகின்ற நிலையில் , எண்ணெய் விலை வீழ்ச்சியடைய ஒபேக் உறுப்பினர்கள் செயற்படுவது அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் வீழ்ச்சியை குறிவைத்தே இவ்வாறு இடம்பெறுவதாக அத்துறைசார் நிபுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த எணணெய் விலை வீழச்சியானது தென் அமெரிக்க பொருளாதார அபிவிருத்திக்கு பாதகமான நிலையை உருவாக்குவதுடன் ஆசிய சந்தையிலும் பாதகமான நிலை ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.