புதியவை

காவியக் காதல் - நாகினி


உன்னுள் புகுந்த
என்னை நானே எரித்திடுவேன்
எரிமலையாய் குமுறி
உன்னை என்னுள் சபிக்கும் நேரம்
உன்னுள் புகுந்த
என்னை நானை விலக்கிடுவேன்!

விலகிடாத சொந்தமில்லை
விளங்காத பந்தமில்லை
விட்டு விலகிடவே உயிர்
விளையாடித் துடிக்கிறது உடலில்!
விலகிடும் உன்னுள்ளிருக்கும் நான்
வினையாகி தத்தி தவழ்ந்து
விளையாட வைத்தது காலவிதி!

கனவாகிப் போன
காதல் வாழ்வு
கசங்காமல் காலம் கடந்து
கண்முன் விரித்து
காலமெனும் விதி
கவலை கனமென விளையாடி
கணப்பொழுதில் இதயமதை
கானல் காதல் மரணப்படுக்கையில்
கல்லில் உளியென அடிப்பதுவும்
காவியக்காதலாக மண்ணில் செதுக்கத்தானோ!

...

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.