புதியவை

பாராளுமன்றத்தில் வலுவான நிலையை எமக்குத் தாருங்கள் – அநுரகுமார

பாராளுமன்றத்தில் வலுவான நிலையை எமக்குத் தாருங்கள் – அநுரகுமார

மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று (12) கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கம்பஹாவில் இடம்பெற்றது.
இதன்போது அநுரகுமார தெரிவித்ததாவது;
ஐந்து வருடங்கள் எமக்கு இந்த நாட்டை ஆட்சி செய்ய சந்தர்ப்பம் தாருங்கள். 67 வருடங்கள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் நீங்கள் வழங்கினீர்கள். எமக்கு 5 வருடங்கள் தாருங்கள். 67 வருடங்கள் ஏமாற்றம் அடைந்ததன் பின்னர் 5 வருடங்கள் ஏமாற்றமடைந்தால் என்ன? இல்லை, நாங்கள் உறுதியளிக்கின்றோம். இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம். மக்களை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்ளக்கூடிய பொருளாதாரத்தை ஏற்படுத்துவோம். எங்களை இன்னும் அறிய வேண்டுமாயின் அதற்கு சிறு காலம் எடுங்கள் பரவாயில்லை. ஆனால் பாராளுமன்றத்தில் வலுவான நிலையை எமக்குத் தாருங்கள்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.