புதியவை

இலங்கை மக்கள் வழங்கிய நேர்மையான பங்களிப்பு ஆச்சரியமளித்தது – இத்தாலியின் புதிய தூதுவர்

இலங்கை மக்கள் வழங்கிய நேர்மையான பங்களிப்பு ஆச்சரியமளித்தது – இத்தாலியின் புதிய தூதுவர்

ஜனநாயக தேர்தல் ஒன்றுக்காக இலங்கை மக்கள் வழங்கிய நேர்மையான பங்களிப்பு தொடர்பாக தாம் ஆச்சரியம் அடைந்ததாக இலங்கைக்கான இத்தாலியின் புதிய தூதுவர் பாபலோ ஒன் ட்ரே பார்டோலி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று (22) சந்தித்து தங்களின் சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
இலங்கைக்கான இத்தாலியின் புதிய தூதுவர் பாபலோ ஒன் ட்ரே பார்டோலி உட்பட அமெரிக்க மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதியை சந்தித்து தங்களின் சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.
அந்த நாடுகளுடனான வலுவான தொடர்புகள் குறித்து அவதானம் செலுத்திய ஜனாதிபதி, வர்த்தக, முதலீட்டு மற்றும் சுற்றுலாத் துறைகளைத் தொடர்ந்தும் வலுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
சுதந்திரமானதும் அமைதியானதுமான தேர்தல் தொடர்பில் புதிய தூதுவர்கள் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.