புதியவை

அபாயா -தீரன்ஆர்.எம். நௌஷாத்


அபாயா-
அது என் கறுப்பு வானம்.
அது என் உரிமை
அது என் கறுப்பு உயில்.
தன்மானம் பேணும்
தனித்துவத் தனித் துணி- புனிதகஹ்பா அணிகின்ற கறுப்பு இஹ்ராம்.

அபாயா-
அது என்னைக் காக்க வந்த அபாபீல்.
கட்டாயம் அணிய வேண்டிய
கறுப்புக் கேடயம்.
காத்துக் கறுப்பு அண்ட முடியாத
கறுப்புக் காற்று.
அபாயா-
கறுத்த இருளுக்குள் வெள்ளை நிலாவை
ஒழித்து வைத்திருக்கும்
ஒரு மந்திரப் போர்வை.
முழு உலகும் மகளிர்
சுற்றிவரச் சுதந்திரம் தரும்
கறுப்பு வீசா.
கடும் தொலையிலும்
கண்ணில் படும் கறுப்பு மின்னல்
அது-
பெண்ணுரிமையின் முதற்படி
கருவிஷமப் ”ச்சிகளுக்கு- அது
ஒரு கறுப்புத் துளசி
காமுகர் விழிக்கணை தடுக்கும்
கறுப்பு ஏவுகணை.
இனத்துவேசிகள் மீது
இரைந்து சீறி எழும்
ஒரு கருநாகத்தின் படம்.
அபாயா-
நான்
விருப்புடன் அணியும் கறுப்பு மேகம்.
தங்கத்தை தன் கைக்குள்
பொத்தி வைத்திருக்கும் கறுப்பு வைரம்.
அது-
நகைகள் தேவைப்படாத
கரு நவரத்தினம்.
ஒப்பனை இன்றிய
கற்பனை ரகசியம்...
ஒரு நெற்றிப் பிறையையும்
இரு சுட்டு விழிகளையும்
மட்டும் படம் பிடித்துக் காட்டுகிற
முக்காட்டு வலைத் தளம்.
கறுப்பு வழிகளின் கவிதைக் களம்.
அபாயா-
மரணம் தவிர
மற்றவைக்கு மருந்து தரும்
ஆடைக்கருஞ்சீரகம்.
தங்கைக்கு அது தற்காப்புக் கலையாடை
மனைவிக்கு அது மறைமுக முகவரி
அன்னைக்கு அது ஆதரவுக் கரம்.
முஸ்லிம் மகளிர் மட்டுமல்ல
முழு உலகப் பெண்களும்
மூடவேண்டிய மூடுமந்திரம்.
கணவனைக் கண்காணிக்கும்
கடும் தந்திரம்.
அது-
கற்பைக் காக்கும் கறுப்புக் காடு
பலரதும்
பாலியல் இம்சை தடுத்திடும்
பாலைவனத்து கறுப்புத் தூசி..
யார்க்காகவும் விட்டுவிடாத
மார்க்கக் கட்டுப்பாடு
அபாயா
அது எப்போதும்
என் கறுப்பு வானம்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.