புதியவை

தாஜூடின் இறந்ததாக கூறப்படும் இடத்தில் விசாரணை

தாஜூடின் இறந்ததாக கூறப்படும் இடத்தில் விசாரணை

றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூடின் உயிரிழந்ததாக கூறப்படும் நாரஹேன்பிட - ஷாலிகா விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இன்று அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 


அரச பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளுடன் மோட்டார் வாகன ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நாரஹேன்பிட பொலிஸார் உள்ளிட்ட குழுவினரும் விசாரணைகளுக்காக சென்றுள்ளனர். 

கடந்த 2012ம் ஆண்டு குறித்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வசீம் தாஜூடின் இறந்ததாக கூறப்பட்டது. 

எனினும் பின்னர் அது விபத்து அல்ல என இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். 

இதனையடுத்து அண்மையில் அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.