புதியவை

களனி கங்கையில் எண்ணெய் கலக்க காரணமான தொழிற்சாலையின் உற்பத்தி இடைநிறுத்தம்

களனி கங்கையில் எண்ணெய் கலக்க காரணமான தொழிற்சாலையின் உற்பத்தி இடைநிறுத்தம்

களனி கங்கையில் எண்ணெய் கலக்க காரணமான தொழிற்சாலையின் சுற்றாடல் அனுமதிப் பத்திரமும் உற்பத்தி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவிக்கின்றது.
மறு அறிவித்தல் வரை குறித்த தொழிற்சாலையின் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி தெரிவித்தார்.
எண்ணெய் கலப்பினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
களனி கங்கையில் எண்ணெய் கலந்ததால் கடந்த 17 ஆம் திகதி கொழும்பு, தெஹிவளை-கல்கிசை ஆகிய மாநகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், மஹரகம மற்றும் பொரலெஸ்கமுவ ஆகிய நகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் நீர்விநியோகத்தை மட்டுப்படுத்துவதற்கு நேரிட்டது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.