புதியவை

இலங்கையில் அனைவருக்கும் சமவுரிமை காணப்படுகின்றது – ரணில் விக்கிரமசிங்க


தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் மேடைகளில் பின்வருமாறு தமது கருத்துக்களை தெரிவித்தனர்.
ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது:
சிங்களம், தமிழ், முஸ்லிம், இந்து, பௌத்தம் மற்றும் கத்தோலிக்கம் யாராக இருந்தாலும் இலங்கையில் அனைவருக்கும் வாழ்வதற்கு சம உரிமைகள் காணப்படுகின்றன. அனைவரினதும் மத உரிமையை நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம். நாங்கள் அரசியல் செய்ய இனவாதமோ மதவாதமோ
எமக்கு தேவையில்லை. 
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க தெரிவித்ததாவது :
கொள்ளை அடித்தவற்றை மறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். கொலை செய்தாவது அதிகாரத்தை கைப்பற்ற முற்படுகின்றனர். எதற்காக நாங்கள் அதிகாரத்தை வழங்க வேண்டும். யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தார். அவர் தனியாக அதனை செய்ய வில்லை. யுத்தத்தின் பெரும்பாலான பகுதியை ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமும் எனது அரசாங்கமும் நிறைவுக்கு கொண்டு வந்தது. அதன் பின்னர் அவரிடம் கையளிக்கப்பட்டது. 
இதேவேளை சரத் பொன்சேகா தெரிவித்ததாவது :
அதிகாரத்தில் இருந்த போது கடமைகளை செய்யாத ஒருவர் அதிகாரம் இல்லாத நிலையில் விருப்பு வாக்குகளுக்காக போட்டி போடுகின்ற சந்தரப்பத்தில் எவ்வாறு நாட்டிற்கான கடமைகளை செய்வார். ராஜபக்ஸ அன்று கூறியதும் பொய், இன்று கூறியதும் பொய், நாளை கூறுவதும் பொய்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.