
கொட்டாஞ்சேனை – புளுமென்டல் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொருவர் இன்று (03) உயிரிழந்துள்ளார்.
புலத்சிங்கலகே நிரோஷன் சம்பத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கிரேன்பாஸ் – ஸ்டேஸ் புர பிரதேசத்தில் வசித்த 36 வயதான நிரோஷன் சம்பத் வீடு வீடாக சென்று காபட் விற்பதனையே தனது தொழிலாக கொண்டிருந்தார்.
தனது புதல்வர்களை சிறந்த பாடசாலையில் சேர்க்க வேண்டும் என்ற கனவுடன் அவர் மிகவும் சிரமத்துடன் செயற்பட்டார்.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஆமி சம்பத் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு நியூஸ்பெஸ்டிற்கு தெரிவித்தது.
ஆனால் பின்னர் உயிரிழந்தவர் ஆமி சம்பத் இல்லை என பொலிஸ் ஊடக பிரிவு கூறியது.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.