புதியவை

இன்றிலிருந்து புதிய கடவுச்சீட்டு முறைமை அறிமுகம்

இன்றிலிருந்து புதிய கடவுச்சீட்டு முறைமை அறிமுகம்

கடவுச் சீட்டுகளில் விரல் அடையாளத்தை பதிவுசெய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு-குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
16 வயதுக்கு மேற்பட்ட ஒருவருக்கான கடவுச் சீட்டில் விரல் அடையாளம் பதிவுசெய்யப்படவுள்ளதாக குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிடுகின்றார்.
ஆயினும், 16 வயதுக்கு குறைந்தவர்களுக்கான கடவுச்சீட்டில் இந்த நடைமுறை பின்பற்றப்பட மாட்டாதெனவும் அவர் கூறினார்.
இதன்பொருட்டு கொழும்பு பிரதான அலுவலகம் உட்பட மாத்தறை, கண்டி மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய அலுவலகங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இன்று முதல் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பிக்கின்றவர்கள் தமது விரல் அடையாளத்தை வழங்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
விரல் அடையாளங்கள் கணனி மயமாக்கப்பட்டு கடவுச்சீட்டுகளில் அடையாளத்தின் பொருட்டு உள்ளடக்கப்படுவற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.