
தென்ஆபிரிக்க வீரருக்கு பதிலாக இந்திய வீரர் களத்தடுப்பில் ஈடுபட்ட சம்பவமொன்று நேற்று இந்தியாவில் இடம்பெற்றது.
சென்னையில் இந்தியா ஏ, தென்ஆபிரிக்கா ஏ மற்றும் அவுஸ்திரேலிய ஏ அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் நடைபெற்று வருகின்றது.
இதில் பங்கேற்க வந்த தென்ஆபிரிக்க வீரர்களுக்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல்நிலை பாதிக்கப்பட்ட வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே நேற்று மைதானத்தில் களத்தடுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தென்ஆபிரிக்க வீரர் சேஷிக்கும் உடல் நிலை பாதிக்கப்பட, அவருக்கு பதிலாக தென்ஆபிரிக்க அணியின் வீடியோ அனாலிஸ்ட் ஹென்ட்ரிக்ஸ் கோயர்ட்சென் களமிறங்கினார்.
தொடர்ந்து குயின்டன் டி காக்கும் பாதிக்கப்பட்டார். ஆனால் மாற்று வீரரை களம் இறக்க தென்ஆபிரிக்க அணியிடம் வீரர்கள் இல்லை. இதையடுத்து இந்திய வீரர் மன்தீப் தென்ஆபிரிக்காவுக்காக களத்தடுப்பில் ஈடுபட்டார்.
குயின்டன் டி காக்குக்கு பதிலாக மன்தீப் சிங் தென்ஆபிரிக்க அணிக்காக களத்தடுப்பில் ஈடுபட்டது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது என்றாலும் சச்சின் டெண்டுல்கரும் இதே போல எதிரணியினருக்காக களத்தடுப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.