
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிடம் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு தேவையான அறிக்கையை பெற்றுக் கொள்ளும் நிமித்தம் இன்று காலை 9.30 மணியளவில் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா தெரிவித்துள்ளார் .
ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
குறித்த விசாரணையுடன் தொடர்புடைய ஏனைய அனைத்து தரப்பினரிடமும் வாக்கு மூலத் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா சுட்டிக்காட்டியுள்ளார். .
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.