புதியவை

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து ரி.பி. ஏக்கநாயக்க நீக்கம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  நிறைவேற்றுக் குழுவிலிருந்து ரி.பி. ஏக்கநாயக்க நீக்கம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு கடிதமொன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக முன்னாள் அமைச்சர் ரி.பி. ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து இதுவரை நான்கு சிரேஷ்ட உறுப்பினர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால ஆகியோரின் கையொப்பங்களுடன் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரி.பி. ஏக்கநாயக்க தெரிவித்தார்.
எஸ்.எம். சந்திரசேன, பவித்ரா வன்னியாராச்சி, குமார வெல்கம ஆகியோருடன் தாம் கட்சியின் நிறைவேற்றுக் குழுவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
தாம் உட்பட நால்வரும் கடந்த தேர்தலில் அவரவர் போட்டியிட்ட மாவட்டங்களில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்த ரி.பி. ஏக்கநாயக்க, நிறைவேற்றுக் குழுவிலிருந்து தாங்கள் நீக்கப்பட்டமைக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவுடன் கலந்துரையாட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.