இருட்டிக்கொண்டிருக்குது
இரு கண்கள்,,
ஆனாலும் மயங்கி
மண்ணில் விழ
சில மணித்துளிகள்
மிச்சம் இருக்கின்றன!!
வயிற்றுக்குள் குடு குடுவென
ஊறிக் கொண்டிருக்கும்
நண்டு
சற்று நேரத்தில்
நெஞ்சாங்கூட்டை
கடித்துக் குதறலாம்
என்பது என் கணிப்பு!
சீண்ட நாதியில்லா
என்
குடலுக்குள் யாரது
கை விட்டுப் பிசைவது??
புரியவில்லை,,
ஆனாலும் புரட்டி எடுக்கிறது
பெரும் ஏப்பங்கள்!!
அடைக்கும் காதுக்குள்
நடந்து போகும்
காலடிச் சத்தங்கள்
சன்னமாய் குறையுது!!
உடலில் எங்கோ
மறைந்திருந்த உயிர்
இப்போது மிகச்சரியாய்
ஊசலாடுகிறது
தொண்டைக்குழியில்!!
கொலைப்பசி
கொச்சம் கொஞ்சமாய்
பிச்சுத்திண்பதை
காணச் சகியாது
வந்த,,
விசக் காய்ச்சல்
பெரிய மனதோடு
எனைக்
கருணைக்கொலை செய்ய,,
நாடி அடங்கி கிடக்கும்
கை அருகே
விழுந்த
யாரோ புண்ணியவான்
போட்ட
ஐந்து ரூபாய் நாணயத்தில்
கண்ணாமூச்சி ஆடிச் சிரிக்கிறது,,
கடைசிவரை
என் வாய்க்கு எட்டாத
இரண்டு இட்லியும்
கொஞ்சம்
கெட்டிச் சட்னியும்!!
இரு கண்கள்,,
ஆனாலும் மயங்கி
மண்ணில் விழ
சில மணித்துளிகள்
மிச்சம் இருக்கின்றன!!
வயிற்றுக்குள் குடு குடுவென
ஊறிக் கொண்டிருக்கும்
நண்டு
சற்று நேரத்தில்
நெஞ்சாங்கூட்டை
கடித்துக் குதறலாம்
என்பது என் கணிப்பு!
சீண்ட நாதியில்லா
என்
குடலுக்குள் யாரது
கை விட்டுப் பிசைவது??
புரியவில்லை,,
ஆனாலும் புரட்டி எடுக்கிறது
பெரும் ஏப்பங்கள்!!
அடைக்கும் காதுக்குள்
நடந்து போகும்
காலடிச் சத்தங்கள்
சன்னமாய் குறையுது!!
உடலில் எங்கோ
மறைந்திருந்த உயிர்
இப்போது மிகச்சரியாய்
ஊசலாடுகிறது
தொண்டைக்குழியில்!!
கொலைப்பசி
கொச்சம் கொஞ்சமாய்
பிச்சுத்திண்பதை
காணச் சகியாது
வந்த,,
விசக் காய்ச்சல்
பெரிய மனதோடு
எனைக்
கருணைக்கொலை செய்ய,,
நாடி அடங்கி கிடக்கும்
கை அருகே
விழுந்த
யாரோ புண்ணியவான்
போட்ட
ஐந்து ரூபாய் நாணயத்தில்
கண்ணாமூச்சி ஆடிச் சிரிக்கிறது,,
கடைசிவரை
என் வாய்க்கு எட்டாத
இரண்டு இட்லியும்
கொஞ்சம்
கெட்டிச் சட்னியும்!!
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.