புதியவை

ஊவா மாகாண சபை வெற்றிடம் தொடர்பில் ஐ.தே.க விற்கு தடையுத்தரவு

ஊவா மாகாண சபை வெற்றிடம் தொடர்பில் ஐ.தே.க விற்கு தடையுத்தரவு

ஊவா மாகாண சபையில் வெற்றிடமாகவுள்ள இரண்டு மாகாண சபை உறுப்பினர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சியினர் இருவரைப் பெயரிடுவதைத் தடுக்கும் வகையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசீமுக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட கே.பீ.டீ.பிரதீப் விஜேவர்தன தாக்கல் செய்த முறைப்பாட்டை கருத்திற்கொண்ட பின்னரே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெற்றிடம் நிலவும் மாகாண சபை உறுப்பினர்கள் பதவிக்காக பெயரிடப்பட்டுள்ள இருவரை விடவும் தான் தகுதியானவர் என தெரிவித்து, விஜேவர்தன இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
அந்தப் பதவிக்கு பிரதீப் விஜேவர்தனவை பெயரிடாது வேறு இருவரை பெயரிடக்கூடாது என அந்த தடையுத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடையுத்தரவு செப்டம்பர் மாதம் 9 திகதி வரை அமுலில் இருக்கும்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.