புதியவை

சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள் பெற்றுக் கொண்ட வாகனங்கள் மீள ஒப்படைக்கவில்லை

சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள் பெற்றுக் கொண்ட வாகனங்கள் மீள ஒப்படைக்கவில்லை
சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள் பெற்றுக் கொண்ட 20 வாகனங்கள் மீள ஒப்படைக்கவில்லை என டிரான்ஸ் பேரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு தெரிவிக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனத்தின் தேர்தல்கள் கண்கானிப்பு நடவடிக்கைக்கு பொறுப்பான தேசிய அமைப்பாளர் ஷான் விஜதுங்க குறிப்பிட்டுள்ளார்.
மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட கண்கானிப்பு நடவடிக்கைகளுக்காக உறுப்பினர்கள் குறித்த வாகனங்களை  பெற்றுக் கொண்டிருந்தனர் .
எவ்வாறாயினும் தேர்தல் காலத்தில் குறித்த வாகனங்கள் மீள் ஒப்படைக்க வேண்டியது அவசியம் என ஷான் விஜதுங்க சுட்டிக்காட்டியுள்ளார் .
இந்த விடயம் தொடர்பில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்திடம் நியூஸ்பெஸ்ட் வினவியது.
இது வரை மீள் ஒப்படைக்கப்படாத வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளதாக மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார் .

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.