புதியவை

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை எடுத்துச் செல்ல முயற்சித்தவர் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத்தை எடுத்துச் செல்ல முயற்சித்தவர் கைது

வெளிநாட்டு நாணயத்தை சட்டவிரோதமாக எடுத்துச் செல்ல முயற்சித்த ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு நாணயம் 40 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியுடையதென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பூரை நோக்கி இன்று (25) அதிகாலை புறப்பட்டுச் செல்லவிருந்த மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டர்லிங் பவுன் கட்டார் ரியால் மற்றும் யூரோக்களை பயணப் பொதியில் மறைத்து சந்தேகநபர் எடுத்துச் செல்வதற்கு திட்டமிட்டிருந்தாகவும் சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.