புதியவை

மட்டக்களப்பில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பில் போலி நாணயத் தாள்களுடன் ஒருவர் கைது

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் போலி நாணயத்தை பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்ய முயற்சித்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நேற்றிரவு ஒன்பது மணிக்கு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
வர்த்தக நிலையமொன்றில் 500 ரூபா போலி நாணயத்தாளை வழங்கி ஒருவர் பொருட் கொள்வனவில் ஈடுபட்டதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 5000 ரூபா பெறுமதியான 12 போலி நாணயத் தாள்களும், 1000 ரூபா பெறுமதியான 15 போலி நாணயத் தாள்களும், 500 ரூபா பெறுமதியான 06 போலி நாணயத் தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபரிடமிருந்து மொத்தமாக 78,000 ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
திருகோணமலை மூதூர் பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.