புதியவை

நாளைக்கு தேர்தலாம்-மருதநிலா நியாஸ்

நாளைக்கு தேர்தலாம்
==================================
புயலுக்கு முந்திய வானிலைபோல
ஊரெல்லாம் அமைதி
ஆட்பரிச்சிக் கிடக்கு
நாளைய வாக்கெடுப்ப வச்சி...
எம்பியாவேன் என்று - நம்பி
காசு கட்டியவரெல்லாம்
வைன் ஏத்திய பொம்மையப்போல - நாளைக்கி
வக்கிரத்துடன் சுத்துவாக புயலையும் மெச்சி ...


சில தம்பிமர நம்பிய வியூகம்
வீதி வீதியா அலைஞ்சி
வாக்குப்பொட்டி நிறப்ப
வாகனமெல்லாம் ஓடும் ரோட்டால ...
வந்த வாகனம் யார்ரெண்டும் தெரியாம
காலத்தால போய்
மாற்றான்ட சின்னத்துக்கு
வாக்குப்போட்ட ராத்தாமாரும் உண்டு கேக்காத...
பொட்டி கட்டிய கையோட
எம்பியென்ற கணவோட
பாட்டித் தொண்டரெல்லாம் படைசூட
கச்சேரிப் படிபோய் பாத்துக் கிடப்பாக முடிவோட...
நிலமைதான் காயாக காயாக
எம்பியென்ட கனவு வெம்பி - தம்பி
இரவோடு இரவாக தும்பியாக பறப்பாரு
கொழும்போட...
நம்பி ஒன்டுரெண்டு வெண்டாலும்
கடைசியாக என்ன காணுங்கடா வெண்டு
பட்டாசுக் சாக்கோட வந்து
ரோடெல்லாம் கொழுத்துவாக...
வெண்டதோட
அண்டே தொண்டரெல்லாம்
கழட்டிபுட்டு போவாரு
கொழும்பு வாசஸ்தலத்தோட...
உசிர கையில புடிச்சி
இரவு பகலா உழைச்ச தொண்டர்
தொழில் தருவாரெண்ட
எதிர்பார்ப்போட இங்க ...

தேர்தல்ல செலவெளித்த
காச கணக்குப் பாத்து 
வந்த தொழில விக்க 
விலை பேசுறாரு அவரு அங்க...!!!!???

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.