புதியவை

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கு தடை

இன்று (19) நள்ளிரவு முதல் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நிறைவு பெறும் வரை பரீட்சையில் தோற்றும் மாணவர்களை இலக்காக கொண்டு பகுதிநேர வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 23 ஆம் திகதி தரம் ஐந்து புலமைப்ரிசில் பரீட்சை இடம் பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியு.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார் .
பரீட்சைக்கான மாதிரி வினாதாள்களை அச்சிடுவது, அவற்றை விநியோகிப்பது பரீட்சை வினாபத்திரத்தில் உள்ள கேள்விகளை தருவதாக சுவரொட்டிகள், பதாதைகள், கையேடுகள், இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு மாதிரி வினாதாள்களை வர்த்தக நோக்கத்தோடு வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பாடசாலை பரீட்சைகள் ஏற்பாடு மற்றும் பெறுபேறுகள் கிளைக்கு 0112 784 208 அல்லது 0112 784 537 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு ஊடாக முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.
இதனை தவிர 1911 என்ற இலக்கத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தி பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் மேலும் கூறியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.