புதியவை

அபிவிருத்திகளை அனுபவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாழும் கோப்பாய் நலன்புரி முகாம் மக்கள்

அபிவிருத்திகளை அனுபவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் வாழும் கோப்பாய் நலன்புரி முகாம் மக்கள்

நாட்டில் பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெற்றாலும் அவற்றை அனுபவிப்பதற்கு முடியாத நிலையில் இன்றும் பலர் தமது வாழ்கையை முன்னெடுப்பது துரதிர்ஷ்டவசமாகும்.
பல கட்டிடங்கள், மனைகள் நகர் பகுதிகளில் கம்பீரமாய் காட்சியளித்தாலும் ஒரு சிலர் எவ்வித அடிப்படைவசதிகளும் அற்ற நிலையில் குடிசைகளில் வாழ்கின்றமை கவலைக்குரிய விடயமாகும்.
கோப்பாய் நலன்புரி முகாமில் சுமார் 25 குடும்பங்கள் வாழ்கின்றனர்.
எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையிலே இவர்கள் சொல்லொண்ணாத்துயரங்களுடன் வாழ்கையை முன்னெடுத்துவருகின்றனர்.
இந்த மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டு 26 வருடங்கள் கடந்துள்ளன.
பலாலி, வசாவிளான் மற்றும் மயிலட்டி போன்ற தமது சொந்த இடங்களுக்கு திரும்பவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு இந்த மக்களிடையே அதிகமாக காணப்படுகின்றது.
இந்த நலன்புரிமுகாமிலுள்ள சில குடும்பங்கள் சொந்த இடங்களுக்கு அனுமதிக்கப்பட்ட போதும் அங்கு அடிப்படை கட்டமைப்புக்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படாமையால் சொந்த இடங்களுக்கு மீண்டும் செல்வதற்கான வாய்ப்பு இவர்களுக்கு தடையாக காணப்படுகின்றது.
நகர பகுதி மக்களை ​போன்று பல அபிவிருத்திகளை அனுபவிக்கவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பில் கோப்பாய் நலன்புரி மக்கள் காத்திருக்கின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.