புதியவை

அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து வெளியேறத் தடை விதிக்குமாறு மனுத்தாக்கல்

அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து வெளியேறத் தடை விதிக்குமாறு மனுத்தாக்கல்

மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து வெளியேறுவதற்குத் தடைவிதிக்குமாறு கோரி கொழும்பு மேலதிக நீதவான் சந்திம லியனகே முன்னிலையில் இன்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் மாகாண சபை உறுப்பினரான ரேணுக பெரேராவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய வங்கி ஆளுநரான அர்ஜுன் மகேந்திரன் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி, முதலில் ஒரு பில்லியன் ரூபா பெறுமதியான முறிகளை விநியோகித்த பின்னர், அன்றைய தினமே மீண்டும் பத்து பில்லியன் ரூபாவிற்கான முறிகளை விநியோகித்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அரசாங்கத்திற்கு 139.3 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த இழப்பானது தற்போது 72 பில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளதால், அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விடயங்களை ஆராய்ந்த பின்னர் நாளை தனது தீர்மானத்தை அறிவிப்பதாக மேலதிக நீதவான் சந்திம லியனகே தெரிவித்துள்ளார்

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.