புதியவை

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சுற்றாடல் அறிக்கை


கொழும்பு துறைமுக நகரம் தொடர்பாக புதிய சுற்றாடல் அறிக்கை

கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் புதிதாக சுற்றாடல் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க மகாவலி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.
புதிதாக சுற்றாடல் அறிக்கையை தயாரிப்பதற்கு முன்னதாக அதுகுறித்த திட்டமொன்றை வகுப்பதற்கான பொறுப்பு கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க குறிப்பிடுகின்றார்.
கடந்த நாட்களில் கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் நிலவியதுடன் விமர்சனங்களும்
முன்வைக்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து துறைமுக நகரத் திட்டத்திற்கு பொறுப்பாகவுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையினால் சுற்றாடல் அதிகார சபையிடம் புதிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக
அமைச்சின் செயலாளர் கூறினார்.
அதன் பின்னர் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் கலந்துரையாடி கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைமையில் புதிதாக சுற்றாடல் அறிக்கையை தயாரிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சுற்றாடல் அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைகள் பெரும்பாலும் பூர்த்தியடைந்துள்ளதுடன் அதனை விரைவில் நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மகாவலி மற்றும்
சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகின்றார்.
அறிக்கையின் பிரகாரம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனத்துடன் இணைந்து குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின்னரே, துறைமுக நகரத்தை நிர்மாணிப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.