புதியவை

அப்பாவி! - கொ.பெ.பி.அய்யா.


ஒன்னும் புரியவில்லை--இந்த
உலகம் தெரியவில்லை.
பின்னும் பாதையால--பாவி
எண்ணம் தெளியவில்லை.
ஏதும் அறியவில்லை--ஒரு
சூதும் பழகவில்லை.
பேதம் உணர்வதற்கோ--நானோ
வாதம் பயிலவில்லை.
சொந்தம் விரியவில்லை-நல்ல
பந்தம் வளரவில்லை.
எந்த நிழலிருக்கு.நம்பி
ஒண்ட இடமுமில்லை.
ஆசை கொள்ளவில்லை--அதனால்
காசை மதிக்கவில்லை.
பொய்கள் செய்வதற்கும்--எனக்குள்
போக சிந்தையில்லை
மனதில் மயக்கமில்லை---எந்த
கனமும் மனதிலில்லை..
பிணக்கம் வளர்வாகும்--வரும்
கணங்களும் தேவையில்லை.
எவரோடும் போட்டியில்லை--எனது
எண்ணமும் கோட்டியில்லை.
நட்பு நலம் வாழ--இன்னும்
நாளும் விடியவில்லை.
எழுத்தின்றி வேறில்லை--வேறு
வழுத்திட நாதியில்லை.
பழுத்துவிட்டேன் உதிரவும்--இனி
கொழுத்து ஆவதில்லை.
நானொரு பாவியில்லை-இங்கு
யாரோடும் பகையில்லை.
அப்பாவி எனும் பெருமை--அய்யா
அதைவிடப் புகழில்லை.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.