புதியவை

எதிரும்புதிருமாக மாயம் என்னடி..-நாகினி


எவர் வந்து பேசியபோதும்
இவர் வந்து பேசவில்லையென
சுவர் பார்த்துப் புலம்புமளவிற்கு
அவர் செய்த மாயம் என்னடிதோழி!

எமை இங்கு வாட்டும்
சுமை இங்கு தீர்க்காது அவருள்ளம்
தமை மறந்து கடமை ஒன்றே
இமை யென்றான தேனோதோழி!

என்று வருவாரென எதிர்பார்த்து
ஒன்று மறியாத் தருணத்திலும்
கன்று பார்த்தப் பசுவென
இன்று துள்ளியாடிட அவர்செய்த மாயம் என்னடிதோழி!

எதிர் அவர் வந்தால்
கதிர் சுடும் வெம்மையென
உதிர் வார்த்தை அம்புகளால்
சதிர் ஆடத்தோன்றுவ தேனோதோழி!

எமர் போல் உயிர்வாங்கும் கோபக்கனல்
அமர் விருப்பின்றி எரிந்ததின்று
நமர் பதார்த்தம் போலாகி அவரோடு
சமர் புரியாதிருக்க அவர்செய்த மாயம் என்னடி தோழி!

எற்றி விட்டபந்து சுவர்பட்டு மீளுதற்போல்
சுற்றி உறவு இருக்கையிலும்
பற்றி என்னைச் சுற்றிப் படருமவர் உள்ளம்
வற்றி வதங்கிடுமெனக் கோபம் விடுத்தேனோதோழி!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.