புதியவை

நிஷா பிஸ்வால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார்

நிஷா பிஸ்வால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தார்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு இன்று (26) முற்பகல் நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் உள்ளிட்ட
முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள நிஷா பிஸ்வால் இன்று (26) பிற்பகல் இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
நேற்றைய தினம் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இரு தரப்பு உறவுகள், தேசிய நல்லிணக்கம், சமாதானம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே நிஷா பிஸ்வால் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தது.
ஜனநாயகம் மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளரும் இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.
அவர் நாளை வரை நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.