புதியவை

இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய பிரேரணை – அமெரிக்கா தெரிவிப்பு

இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய பிரேரணை – அமெரிக்கா தெரிவிப்பு

இலங்கைக்கு ஆதரவாக செப்டம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புதிய பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் கொழும்பில் இன்று அச்சு ஊடங்களுக்கு இதுதொடர்பில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இணக்கப்பாடு மற்றும் ஒத்துழைப்புடன் இந்த பிரேரணையை முன்வைப்பதாக அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசாங்கம் கடந்த காலப்பகுதியில் செயற்பட்ட விதத்தை நோக்கும்போது பொறுப்புக்கூறல் செயற்பாடு தொடர்பில் புதிய பிரவேசம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அந்த செயற்பாடுகளுக்கு ஊக்கமளிப்பதும், இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் அமெரிக்காவின் நோக்கமாக உள்ளதென நிஷா பிஸ்வால் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள நல்லெண்ணம் நம்பிக்கையாக வலுப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.