புதியவை

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் விபரம் வெளியிடப்பட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் விபரம் வெளியிடப்பட்டது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய பட்டியல் ஆசனங்களுக்கு சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா மற்றும் கதிர்காமதம்பி துரைரட்ணசிங்கம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரினதும் பெயர்கள் இன்று தேர்தல்கள் அலுவலகத்திற்கு கிடைத்ததாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி தேர்தல் மாவட்டத்திலிருந்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கதிர்காமதம்பி துரைரட்ணசிங்கம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதா்கவும் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம் எம் மொஹமட் குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.