புதியவை

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு வாய்ப்பே இல்லை

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு வாய்ப்பே இல்லை


சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எதிர்கால திட்ட அட்டவணைப்படி இந்தியா – பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற வேண்டும். 


இந்த தொடரை ஐக்கிய அரபு எமிரேட்சில் டிசம்பர் மாதம் நடந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. 

தீவிரவாத தாக்குதல் மற்றும் எல்லையில் அத்துமீறல் காரணமாக பாகிஸ்தானுடன் விளையாட மாட்டோம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. 

இந்த நிலையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெற வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:– 

எல்லையில் தீவிரவாதிகளின் தாக்குதலால் பதட்டமான சூழ்நிலை உள்ளது. இதனால் இந்தியா கடும் அதிர்ச்சியில் உள்ளது. எனவே இரு அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டிக்கு வாய்ப்பே இல்லை. 

விளையாட்டில் அரசியலை கலக்கக்கூடாது என்று எல்லோருக்கும் தெரிவிகின்றேன். ஆனால் துரதிருஷ்டவசமாக எல்லையில் அமைதி நிலவாத நிலையில் விளையாடுவதற்கு இது சரியான நேரமில்லை. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

கிரிக்கெட்டில் அரசியலை கலக்கக்கூடாது என்று வாசிம் அகரம் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அவரது கருத்துக்கு சோயிப் அக்தர் மாறுபட்டு இருந்தார். 

2008–ம் ஆண்டு மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு இந்தியா – பாகிஸ்தான் இடையே டெஸ்ட் தொடர் நடைபெற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.