புதியவை

பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் வழங்காமையால் மாணவி தற்கொலை

பரீட்சைக்கான அனுமதிப் பத்திரம் வழங்காமையால் மாணவி தற்கொலை!

நடைபெற்றுக்கொண்டிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை பாடசாலை அதிபர் வழங்காத காரணத்தினால், மாணவியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று வவுனியா - பண்டாரிக்குளம் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. 

19 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் கடந்த ஜூலை மாதம் 06ம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவற்றை மாணவர்களுக்கு வழங்குமாறு அதிபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார். 

எனினும் குறித்த பாடசாலையின் அதிபர், மேற்படி மாணவியின் பரீட்சைக்கான அனுமதிப் பத்திரத்தை மாணவியிடம் வழங்காமல் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி வரை வைத்திருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் முடிவடையும்வரை, குறித்த பாடசாலையின் அதிபரை பணியிலிருந்து இடைநிறுத்துவதற்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.