புதியவை

நிஷா பிஸ்வால் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தார்

நிஷா பிஸ்வால் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்தார்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைந்துள்ள தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் இன்று (25) முற்பகல் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றுள்ளது.
தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் மற்றும் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொம் மலினொவ்ஸ்கி ஆகியோர் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (25) அதிகாலை இலங்கைக்கு வருகைதந்தனர்.
இவர்கள் இருவரும் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.