புதியவை

நபிகளாரின் பொன்மொழியை உண்மைப்படுத்திய விஞ்ஞானி


ஆய்வகங்களில் பெண்களால் தொல்லை:
- உண்மையை உடைத்துச் சொன்ன விஞ்ஞானி!
(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்!)
ஆய்வுக் கூடங்களில் உடன் பணியாற்றும் பெண்கள் பல்வேறு விதமாக ஆண்களுக்கு தொல்லை அளிப்பதாக விஞ்ஞானி டிம் ஹன்ட் கூறியுள்ளார்.
2001-ம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெற்றவர் டிம் ஹன்ட். இவருக்கு வயத 72. தென் கொரியாவில் நடந்த உலக அறிவியல் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பேசிய விஞ்ஞானி டிம் ஹன்ட் இவ்வாறு கூறினார்.


மேலும் அவர் கருத்தரங்கில் பேசும்போது, "விஞ்ஞானிகள் பாலியல் ரீதியாக பிரிக்கப்பட்ட வெவ்வேறு தளங்களில் பணியாற்ற வேண்டும். பெண்களுடன் ஆய்வு கூடங்களில் பணியாற்றும் சக ஆண் விஞ்ஞானிகளுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

உதாரணத்துக்கு, அவர்கள் 3 விதங்களில் தொல்லை அளிப்பார்கள்.
முதலில், நாம் அவர்களோடு காதல் வசப்பட்டுவிடுவோம். இரண்டாவது, அவர்களுக்கு நம் மீது காதல் வரும்.
மூன்றாவது, அவர்களை நாம் விமர்சித்தால், உடனடியாக அழுதுவிடுவார்கள். இதனால் அவர்களோடு இணைந்து பணியாற்றவே முடியாது.

அழுவதை பெண்கள் தங்களது பாதுகாப்புக்காக பயன்படுத்துகின்றனர். ஆனால் அது அப்படி இல்லை. அவர்களது எண்ணம் தவறு" என்றார்.

டிம் ஹன்ட்டின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, அவர் பிபிசி ரேடியோவுக்கு அளித்த பேட்டியில் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

அதில் அவர் கூறும்போது, "நகைச்சுவைக்காக அப்படி கூறினேன். எங்களது வேலையில் ஏற்படும் பிரச்சினைகளை கூறினேன். பிரச்சினைகளில் நான் கூறியதும் ஒன்று. நான் கூறியது முற்றிலும் உண்மை. உண்மையில் எனக்கு அந்த அனுபவம் உள்ளது. ஆய்வகத்தில் பணியாற்றும் பெண்களிடம் காதலில் விழுந்து உள்ளேன். அவர்களுக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. இது அறிவியல் ஆராய்ச்சிக்கு மிகப் பெரிய தடைக்கல்.

ஆய்வகத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் தங்கள் நிலை உணர்ந்து நடந்து கொள்வது அவசியம். உணர்வை கட்டுப்படுத்த முடியாது. இதனால் விஞ்ஞானிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

எனது தவறு என்னவென்றால், பத்திரிகையாளர்கள் இருக்கும் இடத்தில் நான் சிறிது யோசித்து பேசியிருக்க வேண்டும். உணர்ச்சி மிகுதியால் வாழ்க்கை கடினமாகி விடும். நான் கூறியதில் தவறு இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்" என்று கூறியுள்ளார்.

இந்த விஞ்ஞானி தான் கூறிய கருத்துக்கு மனிதர்களுக்குப் பயந்து மன்னிப்புக் கோரிய போதும், அவர் சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை என்பதை யாராலும் மறுக்க இயலாது.
ஆணும் பெண்ணும் கலந்திருக்கும் நிலையில் ஒரு பென்ணுடன் ஒரு ஆண் தனித்திருப்பானேயானால் மூன்றாவதாக அங்கே ஷைத்தான் இருப்பதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எந்த ஆணும் ஒரு பெண்ணிடம் தனிமையில் இருந்தால் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூரினார்கள்
ஆதாரம்: (திர்மிதீ 1091)


விஞ்ஞானக்கூடங்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கா என்ன? ஆண்களும் பெண்களும் தனித்திருந்தால் அங்கே விஞ்ஞான ஆய்வு நடக்காது. வேறு மாதிரியான ஆய்வுகள் தான் நடக்கும் என்பதற்கு விஞ்ஞானியின் அனுபவமே ஆதாரம்.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் இன்னும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகÜல் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: புகாரி 5232


அன்னியப்பெண்கள் இருக்கும் இடத்திற்கு செல்வதை இஸ்லாம் தடுத்துள்ளது. ஆணும் பெண்ணும் கலந்து வேலை செய்யும் போது ஆண்களிடம் பெண்களும், பெண்களிட்த்தில் ஆண்களும் தனித்திருக்கும் நிலை ஏற்பட்டால் ஒழுக்க்க் கேடுகள் அதிகமாகும் என்பதை  நபிகள் நாயக்ம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். யார் யாரோடெல்லாம் தனித்திருக்கலாம்; யார் யாரோடெல்லாம் தனித்திருக்க்க் கூடாது என்று இஸ்லாம் ஒரு தனிப்பட்டியலையே போட்டுள்ளது.

மேற்கண்ட இஸ்லாத்தின் வழிகாட்டுதல் நூற்றுக்கு நூறு சதவீதம் மிக மிகச் சரியானதுதான் என்பதை விஞ்ஞானி   டிம் ஹன்ட் அவர்கள் தெள்ளத் தெளிவான வார்த்தைகளில் தெளிவுபடுத்தியுள்ளார். இதைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே தெளிவுபடுத்தி விட்டுச் சென்றுள்ளார்கள்.
மனிதன் சந்திக்கும் அனைத்துப் பிரச்சைகளுக்கும் தீர்வு சொல்லக்கூடிய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்பது விஞ்ஞானி டிம் ஹன்ட்டின் வார்த்தைகளால் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்....
மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான்.
அல்குர் ஆன் 18:54

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.