
புலத்சிங்கள பகுதியில் லொறியொன்று பள்ளத்தில் குடைசாய்ந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
பெண்கள் இருவரும் லொறியின் சாரதியும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்றிக்கு இடம் வழங்குவதற்கு முயற்சித்த போது நேற்றிரவு லொறி பள்ளத்தில் குடைசாய்ந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஹொரன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன.
விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் புலத்சிங்கள பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.